பல விவசாய சங்கங்கள், இலங்கையின் விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சிடம் மர அணிலை நாட்டின் தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளன.
பயிர்ச்செய்கையை அச்சுறுத்தும் விலங்குகளின் பட்டியலில் மர அணில் முதலிடத்தில் இருப்பதாகவும், இலங்கையின் தேசிய விலங்காக மர அணில் பெயரிடப்பட்டுள்ளதால், அச்சுறுத்தலுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மரஅணிலுக்குப் பதிலாக மற்றொரு உள்ளூர் இனத்தை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய மரபுரிமைகள் தொடர்பான ஆலோசனைக் குழு உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இந்த விடயம் கலந்துரையாடப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
இம் மர அணிலானது இலங்கையில் தென்னை மற்றும் கொக்கோ பயிர்ச்செய்கைகளுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.