பல தனியார் பேருந்து சங்கங்கள் நேற்று (04) நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியுள்ளன. QR குறியீட்டு முறைமையின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை குறைப்பது பஸ் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் ஒரே கருத்தின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் எடுத்த தீர்மானம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
லண்டனில் நடைபெறவுள்ள சைக்கிள் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில் ஆர்யா அணியின் ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்
பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளிட்ட பல பொருட்களின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஜ.தேவபிரான் தெரிவித்துள்ளார். 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின், மொத்த விலை 270 ரூபாவாகவும், 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் bமொத்த விலை 135 ரூபாவாகவும், 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டு, 400 ரூபாவாகவும், 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின், மொத்த விலை 150 ரூபாவாகவும், ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய், ஆயிரத்து 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வரத்தக சங்கத்தின் அவர்…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. உடரட ரயில் வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான கடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை ரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாட்ஸ்அப் (WhatsApp)இல் மூன்று டிக்கள், சிவப்பு நிற டிக்கள் உள்ளன அல்லது ஆப்ஸ் மூலம் உங்கள் செய்திகளை அரசாங்கம் உளவு பார்க்கிறது என்று கூறும் செய்திகளை நம்ப வேண்டாம். அவை போலியாக பரவி வரும் செய்தியே தவிர உண்மையில்லை.
இலங்கைக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட விசாவை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி கெய்லி பிரேசரின் கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.தற்போது இப் பெண்ணுக்கு இங்கிலாந்து அரசு உதவிகளை முன்னெடுத்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காகவே பிரேசருக்கு இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட்டது. எனினும் அவர் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிக்க விசாவைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து ஸ்கொட்லாந்து நகரான அபெர்டீனை தளமாகக் கொண்ட தொழிலாளர் நல மையம், ஸ்கொட்லாந்து அரசாங்கத்துடன் இணைந்து ஃப்ரேசரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் கெய்லியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறும் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கடவுச்சீட்டை மீளப்பெறவும் அவர் பிரிட்டனுக்குத் திரும்பும் வரை இலங்கையில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துக்கொள்ளும் முகமாக பிரித்தானிய உயர்…
பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு உணவு கிடைக்காதது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்டு, பிசினஸ் வகுப்பில் உணவு கிடைக்கவில்லை என்ற கூற்றை திட்டவட்டமாக மறுப்பதாகவும், விமான நிறுவனம் மீது பொதுமக்களின் வெறுப்பைத் தூண்டுவதற்காக உண்மைகளை வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதாகவும் விமான நிறுவனம் கூறியது.
ஒகஸ்ட் 5 வெள்ளிக்கிழமையன்று மேலும் பத்து இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் உள்ள தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று உள்ளூர் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால், அவுஸ்திரேலியா அல்லது இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவதைத் தெரிவு செய்யும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறியை பட்டப் பாடநெறிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று கல்வி அமைச்சுக்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது பற்றி தெரிவிக்கப்பட்டதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறிகளை பட்டப்பாடநெறிகளாக மாற்றுவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்துவதற்கு பல்வேறு தடங்கல்கள் காணப்பட்டதாகவும் விரையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் கல்வி அமைச்சு மற்றும் செயலாளர், மேலதிக செயலாளர்கள் கலந்து கொண்டிருந்ததாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், பாடநெறியில் மாற்றம் ஏற்படும் போது அதற்கான ஓழுங்கு மாற்றங்கள் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கல்வி அமைச்சு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாணந்துரை, அம்பலந்துரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மொஹம்மட் முஸ்னி என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் செய்து வந்த நிலையில் பாணந்துரையில் இருந்து கந்தளாயிக்கு சுற்றுலா சென்ற நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற போதே கந்தளாய் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.