2023 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறியை பட்டப் பாடநெறிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று கல்வி அமைச்சுக்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது பற்றி தெரிவிக்கப்பட்டதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறிகளை பட்டப்பாடநெறிகளாக மாற்றுவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்துவதற்கு பல்வேறு தடங்கல்கள் காணப்பட்டதாகவும் விரையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் கல்வி அமைச்சு மற்றும் செயலாளர், மேலதிக செயலாளர்கள் கலந்து கொண்டிருந்ததாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில், பாடநெறியில் மாற்றம் ஏற்படும் போது அதற்கான ஓழுங்கு மாற்றங்கள் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கல்வி அமைச்சு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.