உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் திகதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது. எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு…
Author: admin
இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் – நோர்வே – சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து, நிறுவனங்கள் மற்றும் அவசர சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் நாளாந்த மின்வெட்டு, பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு அல்லது அவசரகால நிலை பிரகடனம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் குறித்த நாடுகள் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.
உண்மைகளைப் பேசும் என்னால் இனி பொது வெளிகளில் சில விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட முடியாது. எனது கருத்து சுதந்திரம் நீக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மௌனமே அரசியல் தொடர்பிலான கேள்விகளுக்கு எனது பதிலாக அமையும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , நிபந்தனைகளுடனேயே நான் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றேன். எனவே சில விடயங்கள் தொடர்பில் என்னால் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட முடியாது. நான் உண்மையைப் பேசுபவன். எனவே இனி ஊடகவியலாளர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு மௌனமே எனது பதிலாக இருக்கும். காரணம் சில விடயங்கள் தொடர்பில் நான் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டால் மீண்டும் சிறைச்சாலை செல்ல நேரிடும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் என்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு…
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அவர் தனது சொந்த நாட்டில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆனார். இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனையை படைத்தார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தனது சொந்த நாட்டில் 94 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தனது சொந்த நாட்டில் 92 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 19 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன், 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த இரண்டு மாத காலமாக போதியளவு மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தால் 500 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பெரும் வறட்சி நிலை ஆரம்பித்துள்ளது. ஐரோப்பாவை பொறுத்தவரை, பொதுவாகவே அதிக மழை வீழ்ச்சியை பெறும் பிரித்தானியாவில் தற்போது மோசமான வறட்சி நிலை எதிர்கொள்ளப்படுவதால் நேற்று தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பிராந்தியத்தில் அதிகாரபூர்வமான வறட்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா தனது வரலாற்றில் மீண்டும் ஒரு மிக வறண்ட காலத்தை எதிர்நோக்கியுள்ளது. போதிய மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றிவருவதால் நீர்வாழ் விலங்குகளுக்கும் கடும் ஆபத்து உருவாகியுள்ளது. தண்ணீர் உபயோகத்தில் கட்டுப்பாடு வறட்சி காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் தண்ணீர் உபயோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இங்கிலாந்தைப் பொறுத்தவரை முதற்கட்டமாக புல்வெளிகள் மற்றும் தோட்டங்களுக்குரிய நீர்ப்பாசனம் தடை செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சுற்றியுள்ள 15 மில்லியன் மக்களுக்கு விரைவில் இந்தத் தடை நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போதிய மழை வீழ்ச்சியில்லாமல்…
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஸ் அலி உள்ளிட்ட 10 பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், 2022 செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 09 ஆம் தேதி, தற்போது நீர் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்ச்சியான கண்காணிப்புச் செலவு மற்றும் மூலதனக் கடன் சேவைப் பொறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அப்போது தெரிவித்தது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கட்டணங்களை மீள்திருத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கான நீர் சேவைகளை தொடர்ச்சியாக மற்றும் எவ்வித இடையூறும் இன்றி வழங்குவது அவசியம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீர் வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட அரிசி வியாபாரிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சர் தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி உள்ளதாகவும் அவர்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர். இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 50 இலட்சத்து 34,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வருட இறுதி வரை அரிசி இறக்குமதியை தொடர்ந்தால் அரிசியின் அளவு 50 இலட்சத்து 50,000 மெற்றிக் தொன்னை தாண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கலந்துரையாடலில் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் எரிபொருள் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகைத் தந்ததை காண முடிந்தது. கடந்த காலங்களில் QR முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது. மேலும், நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் அடிக்கடி தலையிடுவதால் இந்தியாவுக்கு பிராந்தியத்தில் பிரச்சினை எழக்கூடும். இதனை அறிந்திருப்பதன் காரணமாகவே,இலங்கைக்கு ஆணையிடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது என்று இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது. அண்மையில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வந்தபோது, அதனை நிறுத்துமாறு உத்தரவிடாமல்,இந்தியா தமது பாதுகாப்பு கவலையை இலங்கையிடம் தெரிவித்தமை இதற்கு உதாரணமாகும் என்றும் இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு மீண்டும் மீண்டும் கட்டளையிடுவது இருதரப்பு உறவுகளில் மோசமடைவதற்கும் இந்திய எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரிப்பதற்கும் வழியை ஏற்படுத்தும். அத்துடன் சீனாவுக்கு ஆதரவான சாய்வுக்கும் வழிவகுத்து விடும் அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை, பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை நிலைநிறுத்துவது சிக்கலானதாக மாறிவிடும் என்று குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் சீன ‘உளவுக் கப்பலான’ யுவாங் வாங்-5 வருகை தந்த வேளையில் இந்தியா, இலங்கைக்கு டொர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை பரிசாக வழங்கியமை சிறந்த ராஜதந்திர நகர்வாகும். காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் தீவிர ஈடுபாடு…