நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி. கொடிகார நாட்டில் அரிசி, மாவு, சீனி, பருப்பு, துருவல் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக கூறினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Author: admin
கொழும்பு மா நகர எல்லை பகுதிக்குள் நடமாடும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு மா நகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர எல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கொழும்பு நகர எல்லையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, பாரிய அளவு அதிகரித்துள்ளமையால் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு நகர எல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சிலர், முகக்கவசம் அணிவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், முகக் கவசம் அணிதல், கைகளை சவர்க்காரத்தினால் கழுவுதல், சமூக இடை வெளியைப் பேணுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும், அவர் பொது மக்களைக்…
அரசு தகவல் துறை செய்திகளின் 2022.08.02 தின அறிக்கையின் படி கோவிட் இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (01) பதிவு செய்யப்பட்ட மொத்த கோவிட் இறப்புகள் 07 ஆகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) மேற்கொண்ட சோதனையின் போது, சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ 158 கிராம் தங்கம் மற்றும் 39 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர்களில் அக்குறணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 45 மற்றும் 51 வயதுடைய நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்தனர்.
12.08.2022 முதல் அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் வியாபாரங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களில் பல வாகனங்கள் இருப்பின் அந்த வாகனங்களுக்கு QR குறியீட்டில் எரிபொருளை பெற பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் 10.06 வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 1-வது சுற்றில் வெற்றி பெற்றார். மேலும் அவர் இப்போது அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த நபர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பன்னிபிட்டிய, பரணபார பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முற்பட்ட போது, குறித்த நபர் கத்தியை வைத்திருந்ததாகவும், கழுத்தை அறுப்பேன் என அச்சுறுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவரின் செயலால் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தடைகளை உடைத்து ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க முடிந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
உள்ளூர் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்கான உபகரணங்களுக்காக இறக்குமதி வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் ஆடைத் தொழிலாளர்கள் உள்ளூர் உபகரணங்களை பெற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்களுக்கு தீர்வை வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க HS CODE எனப்படும் ஒத்திசைவு குறியீட்டு இலக்கம் 19 இன் கீழ் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப்பத்திரம் கைத்தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே, வௌிநாட்டு பணியாளர்களால் சட்ட ரீதியாக பணம் அனுப்பப்படுகின்றமையை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டரீதியான முறையில் வௌிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் அந்நியச் செலாவணிக்கு, DUTY FREE எனப்படும் தீர்வை வரிச்சலுகையை அதிகரிக்க அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதே நேரம் அந்நியச் செலாவணியில் 50% மின்சார வாகனங்கள்இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை, உபகரணங்களுக்கான வரிச்சலுகை வழங்கும் தீர்மானம் போன்றனவும் முன்னெடுக்கப்பட்டன.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்ட வழிகளில் அதிக பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக தாம் முன்வைத்த இரண்டு ஆலோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர தெரிவித்துள்ளார். அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவு (duty-free allowance) தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். மேலும் சட்ட வழிகளில் அனுப்பப்படும் பணத்தில் 50%க்கு இணையான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதேநேரம், விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இரட்டைப் பிரஜைகளுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியதாக அவர் மேலும் கூறினார். எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெற்றவுடன் அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.