உள்ளூர் ஆடைக் கைத்தொழில் உற்பத்திகளுக்கான உபகரணங்களுக்காக இறக்குமதி வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் ஆடைத் தொழிலாளர்கள் உள்ளூர் உபகரணங்களை பெற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்களுக்கு தீர்வை வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க HS CODE எனப்படும் ஒத்திசைவு குறியீட்டு இலக்கம் 19 இன் கீழ் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப்பத்திரம் கைத்தொழில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, வௌிநாட்டு பணியாளர்களால் சட்ட ரீதியாக பணம் அனுப்பப்படுகின்றமையை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, சட்டரீதியான முறையில் வௌிநாட்டு பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் அந்நியச் செலாவணிக்கு, DUTY FREE எனப்படும் தீர்வை வரிச்சலுகையை அதிகரிக்க அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் அந்நியச் செலாவணியில் 50% மின்சார வாகனங்கள்இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை, உபகரணங்களுக்கான வரிச்சலுகை வழங்கும் தீர்மானம் போன்றனவும் முன்னெடுக்கப்பட்டன.