கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த நபர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்கு சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பன்னிபிட்டிய, பரணபார பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முற்பட்ட போது, குறித்த நபர் கத்தியை வைத்திருந்ததாகவும், கழுத்தை அறுப்பேன் என அச்சுறுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரின் செயலால் ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தடைகளை உடைத்து ஜனாதிபதி செயலகத்துக்குள் பிரவேசிக்க முடிந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்