அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று போலந்தின் இகா ஸ்விடெக் மற்றும் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். முதலாவது அரையிறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக்கும் பெலராஸின் அரினா சபலெங்காவும் மோதினர். இப்போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர், பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
Author: admin
பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பல் கடந்த 23ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் உள்ள டீசலின் அளவு 76 ஆயிரம் மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல்களுக்கு உடனடியாக பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்ட அவர், பல்பொருள் அங்காடிகளை நடத்தும் எந்தவொரு நிறுவனமும் ஒரு சதம் கூட வரி செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளாவிய ரீதியில் 48 விற்பனை நிலையங்களைக் கொண்ட ஒரு பிரபலமான துணிக்கடையும் ஆண்டுதோறும் ரூ. 700 மில்லியன் சம்பாதிக்கும் ஆடை நிறுவனமும் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்டேட் வங்கியில் 1.4 மில்லியன் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட மூத்த அதிகாரியின் வரிகளை வங்கியே செலுத்துகிறது என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டுமென்றும் இதன் மூலம் வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆழ்ந்த கடமை உணர்வு மற்றும் அவரது பின்னடைவு, அத்துடன் ராணியின் நகைச்சுவை மற்றும் இரக்க உணர்வு ஆகியவற்றை அவர்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். ராணியின் மகன் மூன்றாம் சார்லஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஒரு நேசத்துக்குரிய இறையாண்மை மற்றும் மிகவும் அன்பான தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். அவரது இழப்பு நாடு முழுவதும், சாம்ராஜ்யங்கள் மற்றும் பொதுநலவாய மற்றும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்று எனக்குத் தெரியும்’ என குறிப்பிட்டுள்ளார். இளவரசர் சார்லஸ் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்ஸின் தோழியாக இருந்த ஒரு அன்பான இதயம் கொண்ட ராணியை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா,…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் இராஜாங்க அமைச்சர்களிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது புதிய இராஜாங்க அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்ற நிலையில், இவ்வாறு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் என புதிய இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது தற்போது மிக முக்கியப் பொறுப்பாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர் ஜனாதிபதி முன்னிலையில் 37 இராஜாங்க அமைச்சர் நேற்று பதிவிப்பிரமானம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி துவங்கியிருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் துவக்க விழாவில் தென்பட்ட உற்சாகமும் கூட்டணிக் கட்சியினருடனான நெருக்கமும் பல செய்திகளைச் சொல்கின்றன. ஆனால், தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் யாத்திரை ஏற்படுத்தும் மாற்றமே முக்கியமானது. ராகுல் காந்தி தலைமையில் இந்திய காங்கிரஸ் கட்சி துவங்கியிருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் புதன்கிழமையன்று பிற்பகல் மிகுந்த உற்சாகத்துடன் துவங்கியது. யாத்திரை துவங்குவதற்கு முதல் நாளான செவ்வாய்க் கிழமையன்று, கன்னியாகுமரியில் பெரிதாக யாத்திரை தொடர்பான பரபரப்பு ஏதும் இல்லாத நிலையில், புதன்கிழமை அதிகாலையில் இருந்தே, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்தன. காந்தி மண்டபத்திலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்திலிருந்த கடற்கரைச் சாலையில் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுக் கூட்டம் மாலை ஐந்து மணிக்குத்தான் என்றாலும் பிற்பகல் ஒரு மணியிலிருந்தே தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிய ஆரம்பித்தனர். ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை அளித்து துவக்கிவைக்கும் நிகழ்வு நடந்த காந்தி மண்டபத்தில் முக்கியப் பிரமுகர்களைத்…
பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த மனிதர் என்றும் சிறப்பாக அவர் பணியாற்றி வருகிறார் என்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் தனக்கு சிறந்த நட்புறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி ஓபாமா தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை காட்டிலும் தானே இந்தியாவுக்கு சிறந்த நண்பர் என்றும் கூறியுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஓகஸ்ட் 16ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 2ஆவது முறையாக மீண்டும் கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
நாட்டின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 2022 ஜீலையில் இருந்து ஆயிரத்து 817 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2022 ஒகஸ்டில் ஆயிரத்து 716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது,
கொழும்பு வாழைத்தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் போது கூரிய ஆயுதங்களில் தாக்கிய நிலையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் கொழும்பு 12 ஐ சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது, தாக்குதல் சம்பவத்தடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,