கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஓகஸ்ட் 16ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 2ஆவது முறையாக மீண்டும் கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.