அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று போலந்தின் இகா ஸ்விடெக் மற்றும் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
முதலாவது அரையிறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக்கும் பெலராஸின் அரினா சபலெங்காவும் மோதினர்.
இப்போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர், பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.