மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய வினாசித்தம்பி தாமோதரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு, தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 16 ஆம் திகதி பிள்ளைகளுடன் ஏற்பட்ட தகராறினால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில், அவர் வீடு திரும்பாத நிலையில் கடந்த இரு தினங்களாக உறவினர்கள் தேட ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் பருத்திச்சேனை கன்னன்குடா ஆற்றுப்பகுதியில் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் இன்று தேடிச்சென்ற போது ஆற்றுப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை…
Author: admin
பெண் அழகுக்கலை நிபுணர் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்கள கணக்காய்வாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளர் ஒருவரின் இல்லத்திற்கு பலர் சென்று அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், வாரியப்பொல பிரதேசத்தில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், கொலன்னாவையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதான சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (18) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுொண்டு வருகின்றனர்.
சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை மிக நுணுக்கமாக ஏமாற்றி இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2000 கோடி ரூபா மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 40% முதல் 90% வரையான வட்டி வீதத்தில் பணம் தருவதாகக் கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்தி சுமார் இரண்டு வருடங்களாக பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிபர்கள், பாதுகாப்புத் துறைத் தலைவர்கள், பிரபுக்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிதி மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இணையத்தில் நிதி மோசடிகள் வேகமாக அதிகரித்துள்ளன. சிலர் வங்கிகளில் லட்சக்கணக்கான ரூபா கடன் பெற்று, ஒன்லைன் மோசடி செய்பவர்களிடம் அதிக சலுகைகளைப் பெறுவதற்காக பணத்தைக் கொடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வட்ஸ்அப்,…
இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படும் வரை காத்திருந்த சிலர்,இம்முறையும் மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது,ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாகத் தெரிகிறது எனவும், இதன் விளைவாக, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு,அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய வங்கி கொள்ளையடிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்தை Replay செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரணகர்த்தாக்கள் சகலரும் செம்கம்பள வரவேற்புக்கும் மேலாக…
வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு விரைவில் “காகம்” இலங்கைக்கு வரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட எம்.பியான நிரோஷன் பெரேரா தெரிவித்தார். அவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம் எனவும் நிரோஷன் எம்.பி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று சனிக்கிழமை நாடாமன்றத்தில் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தற்போதைய பிரதமர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது அந்த பதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டினார். இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசித் தொகை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மேலும் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் அரிசித் தொகைகள் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மருதானை பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் பொது சேவை ஆணை குழுவில் மிக உயர்ந்த பதவியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த மாணவனை தாக்கிய ஆசிரியர் , “ஒரு ஆசிரியரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் நீ உருப்பட மாட்டாய்” எனவும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தான் செய்தது தவறு என மூன்று தடவைகள் கடிதம் மூலம் எழுதி வாங்கியவுடன் இந்த விடயத்தினை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். குறித்த மாணவனை தாக்குவதற்கு ஆசிரியரின் மனநிலை தொடர்பில் மனநல வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.…
பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 18 வயதுடைய வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வேறு சில இளைஞர்கள் குழுவுடன் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மொரோந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.