தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று சனிக்கிழமை நாடாமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தற்போதைய பிரதமர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது அந்த பதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.