யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் பொது சேவை ஆணை குழுவில் மிக உயர்ந்த பதவியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த மாணவனை தாக்கிய ஆசிரியர் , “ஒரு ஆசிரியரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் நீ உருப்பட மாட்டாய்” எனவும் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தான் செய்தது தவறு என மூன்று தடவைகள் கடிதம் மூலம் எழுதி வாங்கியவுடன் இந்த விடயத்தினை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறித்த மாணவனை தாக்குவதற்கு ஆசிரியரின் மனநிலை தொடர்பில் மனநல வைத்தியரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமை பீட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மனித உரிமை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்குரிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.