நாட்டில் இன்று காலை முதல் தற்காலிகமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, வெலிசர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன், பேலியகொடை பகுதியிலும் இன்று காலை முதல் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு உரிய முறையில் எரிவாயுவினை பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும், நாவல நுகேகொட வீதியில் முழுமையாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலை திறந்த பல்கலைக்கழகத்தை அண்மித்து எரிவாயுவை பெற்றுத்தரக்கோரி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிருலப்பனை சந்தியை மறித்து பொதுமக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், தமக்கு உடனடியாக எரிவாயு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என…
Author: admin
நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, நிவித்திகல, எஹெலியகொட, கலவான, பலாங்கொடை, இம்புல்பே, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, தெஹியோவிட்ட மற்றும் புளத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல…
கொழும்பில் காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் குழு தமது கூட்டு பிரகடனத்தை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். ‘அரகலயா’ என்ற கூட்டுப் பிரகடனம், போராட்டம் இப்போது பொதுவாக அறியப்படுகிறது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் அனைத்து குழுக்களின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அம்ச கோரிக்கைகளின் பட்டியலைக் கொண்டுள்ளது. அரகலயவின் பிரதிநிதிகள் குழு, கூட்டுப் பிரகடனத்தின் சுருக்கம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்ததுடன், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து விரைவில் செயற்படுமாறு புதிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கோரிக்கைகள் பின்வருமாறு: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் 15 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு இடைக்கால அரசாங்கம் 18 மாத காலத்திற்கு நீடிக்கும் 20வது திருத்தத்தை நீக்குதல் மற்றும் புதிய 21வது திருத்தத்தை கொண்டு வருவது போன்ற அரசியலமைப்பின் அத்தியாவசிய திருத்தங்கள் பொருளாதார நெருக்கடி, நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்கான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சமூக பாதுகாப்பு வலை…
அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மை காரணமாக இலங்கையர்கள் கடல் மார்க்கமாக நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தமிழ் நாட்டில் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இலங்கை பிரஜைகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிக்கு செல்லும் கடல் மற்றும் சாலைகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய போலீஸ் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வன்முறைப் போராட்டங்கள் மற்றும் அவசரகால அதிகாரங்களுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் இந்தியாவில் தஞ்சம் புகுவதற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய மாநில அரசாங்கம் இந்திய உள்துறை அமைச்சுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் சிறிய தொகுதிகளாக அகதிகளின் வருகை தொடங்கிய நிலையில், பல குடும்பங்கள் ராமேஸ்வரம் கடற்கரையை அடைய படகுகளை எடுத்துச்…
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து நுட்பமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், புதிய பிரதமர் நேற்று மாலை பல பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறினால், புதிய பிரதமரும் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என பிக்குகள் எச்சரித்தனர். “சமீபத்திய சம்பவங்களைப் போலவே, யானையும் பெய்ரா ஏரியில் குளிக்க வேண்டியிருக்கும்,” என்று அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினர், தேசத்தின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்குமாறு வலியுறுத்தினர். திங்கட்கிழமை (09) கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, கோபமடைந்த பொதுமக்களால் பல ராஜபக்ச விசுவாசிகள் பேரா…
உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (12) மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெயின் விலை 108 டொலர் 8 சதமாக உயர்ந்தது, WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டொலர் 30 சதமாக இருந்தது.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் புதிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்துஇலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய பிரதமராக ரணில்விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளதை கடுமையாக சாடியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இது மீண்டுமொரு முறை ராஜபக்சாக்களை காப்பாற்றுவதற்கான ஏமாற்றும் ஜனாதிபதியின் சிறுபிள்ளைத்தனமான முயற்சி என குறிப்பிட்டுள்ளார். மக்களால் தனது தொகுதியால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஆறாவது முறை பிரதமராக வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணி;ல்விக்கிரமசிங்க தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்,அவரது கட்சியின் ஒரேயொரு உறுப்பினர் அவர்,ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள ராஜபக்ச தலைமையிலான பொதுஜனபெரமுனவிடமே அனைத்தும் தங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் என்டிரீவிக்கு கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு: ஒரு வார காலத்தில் புதிதாக 35 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பரவல் 12 சதவீதமும், இறப்பு 25 சதவீதமும் குறைந்துள்ளது. அமெரிக்காவில் தொற்று பரவல் 14 வீதமும், ஆபிரிக்காவில் 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேற்கு பசுபிக், பகுதிகளில் நிலையாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நிருபர்களிடம் கூறியதாவது, நவம்பரில் முதன்முதலாக ஒமைக்ரோனை கண்டறிந்த தென் ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்…
பொதுவாக Apps கள் பல விதமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தினசரி நாம் பயன்படுத்தும் அனைத்து Apps களும் வானத்திலிருந்து இறங்குவதில்லை. அவற்றை எமது தேவைகளுக்கு ஏற்ப தனி நபரால் அல்லது ஒரு நிறுவனத்தால் தான் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் Apps கள் உருவாக்கியவர்கள் எவ்வாறு கட்டளைகளை பிறப்பித்துள்ளார்கலோ அவ்வாறே அது இயங்குகின்றன. “ஒருவர் இந்த இடத்தை Touch (டச்) செய்தால், நீ அவரது புகைப்படத்தில் வெள்ளை நிறம் அதிகமாக காட்டு” (பேச்சுவழக்கில் உதாரணத்திற்காக கூறுகிறேன்). இவ்வாறு ஒரு Apps யில் கட்டளையிட்டிருந்தால் பயனாளர்கள் ஒவ்வொரு முறையும் Touch (டச்) செய்யும் போது அது அதன் கட்டளையை செய்கிறது. இவ்வாறே எம்மிடம் இருக்கும் அனைத்து Apps களும் இயங்குகின்றன. Apps களை செய்பவர்கள் என்ன கட்டளைகளை பிறப்பித்துள்ளார்கள் என்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இவ்வாறான Apps களை Play Store ற்கு கொண்டு வர வேண்டுமென்றால் குறிப்பிட்ட App ஐ செய்தவர்கள் பல நிபந்தனைகளை பின் பற்ற வேண்டும். பயனர்களுக்கு பாதுகாப்பான Apps ஆஹ்?, சரியான முறையில் கட்டளைகள் பிறப்பித்துள்ளனரா?, ஏதேனும் வைரஸ் கள் உள்ளனவா?, அதை Install செய்தால்…