பொதுவாக Apps கள் பல விதமான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தினசரி நாம் பயன்படுத்தும் அனைத்து Apps களும் வானத்திலிருந்து இறங்குவதில்லை. அவற்றை எமது தேவைகளுக்கு ஏற்ப தனி நபரால் அல்லது ஒரு நிறுவனத்தால் தான் உருவாக்கப்படுகிறது.
அவ்வாறு உருவாக்கப்படும் Apps கள் உருவாக்கியவர்கள் எவ்வாறு கட்டளைகளை பிறப்பித்துள்ளார்கலோ அவ்வாறே அது இயங்குகின்றன. “ஒருவர் இந்த இடத்தை Touch (டச்) செய்தால், நீ அவரது புகைப்படத்தில் வெள்ளை நிறம் அதிகமாக காட்டு” (பேச்சுவழக்கில் உதாரணத்திற்காக கூறுகிறேன்). இவ்வாறு ஒரு Apps யில் கட்டளையிட்டிருந்தால் பயனாளர்கள் ஒவ்வொரு முறையும் Touch (டச்) செய்யும் போது அது அதன் கட்டளையை செய்கிறது.
இவ்வாறே எம்மிடம் இருக்கும் அனைத்து Apps களும் இயங்குகின்றன. Apps களை செய்பவர்கள் என்ன கட்டளைகளை பிறப்பித்துள்ளார்கள் என்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இவ்வாறான Apps களை Play Store ற்கு கொண்டு வர வேண்டுமென்றால் குறிப்பிட்ட App ஐ செய்தவர்கள் பல நிபந்தனைகளை பின் பற்ற வேண்டும். பயனர்களுக்கு பாதுகாப்பான Apps ஆஹ்?, சரியான முறையில் கட்டளைகள் பிறப்பித்துள்ளனரா?, ஏதேனும் வைரஸ் கள் உள்ளனவா?, அதை Install செய்தால் போன் யிற்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா போன்ற பல பரிசோதைகளுக்கு பின்னரே Play Store யில் Apps கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. அத்துடன் கட்டணங்களும் அறவிடப்படும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம். இவ்வாறான பரிசோதனைகளை எதிர்நோக்க முடியாமல் தான் GB WhatsApp / Yo WhatsApp / FM WhatsApp / TubeMate போன்ற திருட்டு Apps களை உருவாக்கி பயனாளர்களின் தகவல்களை சூறையாடுவதற்கு Internet யில் போடுகின்றனர்..
எனது Photo (போட்டோ) வைத்து என்னதான் செய்ய போகிறார்கள்? என்று கேற்கும் அதி பயங்கர புத்திசாலிகளே!
உங்களுக்கு உதாரணத்திற்கு ஒரே ஒரு விஷயம் கூறுகிறேன் கேளுங்கள். பல விதமான Dating (டேட்டிங்) தளங்கள் உள்ளன. பணம் சம்பாதிப்பதற்கு அங்கு இருக்கும் ஆண்கள் பெண்கள் எல்லாருமே உண்மையான மனிதர்கள் கிடையாது 90% மான புகைப்படங்கள், வீடியோக்கள் திருடப்படும் போட்டோக்களை கொண்டே உருவாக்கப்படுகின்றன. Photo (போட்டோ) வைத்து வீடியோ ஒன்றை உருவாக்க முடியுமா என்று கேட்டால்? ஆம்.
ஆகவே Play Store யில் இல்லாத Apps களை பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுங்கள். இணைய உலகத்தில் பாதுகாப்பாக இருங்கள்.
By: Nowfer Rifkan