களுத்துறையில் நடைபெற்றக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதே தெரிவதாக அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். முறைமை மாற்றத்தை (சிஸ்டம் சேஞ்ச்) கோரி நாட்டில் சுனாமி ஒன்று ஏற்பட்டது. இதனால் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியதோடு, நாட்டைவிட்டும் வௌியேறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் கூறினார். எனினும், நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தைக் கோரியிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக் கட்சியில் இணைந்துக்கொண்டது மாத்திரமே நாட்டில் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Author: admin
தேசிய சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தேசிய சபையை நிறுவுவதற்கான பிரேரணையின் பிரகாரம், முப்பத்தைந்து உறுப்பினர்களில் 28 பேர் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் பவித்ரா வன்னியாராச்சி ஒரேயொரு பெண் உறுப்பினர் என சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, எஞ்சியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குமாறு சபாநாயகரிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் பேரவையானது, இலங்கை காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து UHRC ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் GalleFace Green இல் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. இலங்கை காவல்துறையால் அதன் குடிமக்களுக்கு எதிரான திட்டமிட்ட கைதுகளும், வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் 09-10-2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து உலகளாவிய மனித உரிமைகள் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பண பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் நேற்று முன்தினம் (06) அதிகாலை கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் இடம்பெற்றுள்ளது. வாள் உட்பட கூரிய ஆயுதங்களுடன் ரயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவரும் ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பியோடிய போது, ஒருவரை காயங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 05.30 மணியளவில் அங்குலான ரயில் நிலையத்தை கொழும்பு – மாத்தறை ரயில் அண்மித்துள்ளது. இதன்போது கொள்ளையர்கள் இருவரும் ரயிலில் ஏறியுள்ளனர். கொள்ளையர்கள் குறித்த ஒரு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த கணவன் மற்றும் மனைவியை அச்சுறுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளனர். பின்னர் கணவனின் பணப் பையை பெறுவதற்கு கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அதற்கு கணவன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது அவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதன்போது மனைவியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு அங்கத்துவ நாடுகள் பயணத்தடை விதிக்குமென தகவல் வெளியாகியுள்ளது. இதில் உடனடி நடவடிக்கையெடுக்கும் கனடா, குறைந்தது இராணுவ உயர் அதிகாரிகள் மூவரை தடைசெய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளும் இதைப் பின்பற்றும் என நம்பப்படுகிறது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், 20 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஏழு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. இந்தத் தீர்மானத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் செயல்படும் புதிய செயலகம்,…
99,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் நங்கூரமிட்டுள்ளது. 7 மில்லியன் டொலர்கள் இல்லாத காரணத்தினால் இந்த கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெறவில்லை என்பதோடு தாமதக் கட்டணமம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதன்படி நங்கூரமிட்ட ஒரு நாளுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை லட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்றும் மொத்தமாக 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரல் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட யூரல் கச்சா எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தது. அதனை விடுவிப்பது தொடர்பாக நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்பிரகாரம் மலேசிய நாட்டு மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது தெரியவருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 05 மில்லிமீற்றருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் அந்த வகையில், “மனித உடலில் பிளாஸ்டிக் நச்சுகளை சந்திப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை, அவை செல்களை பாதிப்படையச் செய்வதுடன், புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. தாய்ப்பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என ” இந்தப் பரிசோதனையை நடத்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை விசேட வைத்தியர்கள் தொடர்பில் மாத்திரம் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வது தவறாகும். ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், சுகாதார துறையில் கடமையாற்றும் அனைவரின் வயதெல்லையிலும் பாரபட்சமின்றி மாற்றங்கள் கொண்டுவரப்படுவது அவசியமாகும் என்றார்.
கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடாத படித்த இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை ஆள முடியாத அளவுக்கு தமக்கு வயதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் உருவாக்கப்போகும் இளம் தலைவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.