தேசிய சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இந்த கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
தேசிய சபையை நிறுவுவதற்கான பிரேரணையின் பிரகாரம், முப்பத்தைந்து உறுப்பினர்களில் 28 பேர் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் பவித்ரா வன்னியாராச்சி ஒரேயொரு பெண் உறுப்பினர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, எஞ்சியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குமாறு சபாநாயகரிடம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.