இம்மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை நள்ளிரவு (05) 12.00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப் பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்வரும் 6ஆம் திகதி வீடு செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
Author: admin
பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நிமல் ஸ்ரீபால டி சில்வா அல்லது டலஸ் அழகப்பெரும ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்திற்கான வேட்பாளரை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய வழிநடத்தல் குழு தெரிவு செய்யும். இடைக்கால நிர்வாகத்துக்கான 11 விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் குழு நேற்று கலந்துரையாடியுள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இடைக்கால அரசாங்கத்துக்காக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.
தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வரும் 6ஆம் திகதி எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தாலை நடத்தி ஊழல் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு இறுதிச் செய்தியை வழங்குவோம். 6 ஆம் திகதிக்கு முன் புறப்பட வேண்டும். எனவே, இந்நாட்டு மக்களை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கைகளை இணையுங்கள். பணிகள் நிறுத்தப்படும். போக்குவரத்து நிறுத்தப்படும். ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து தங்கள் அருகிலுள்ள வீதிக்கு கறுப்புக் கொடியைக் கொண்டு வர வேண்டும். வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள். நிறுவனங்களில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும். நாட்டு மக்களுடன் இணைந்து ராஜபக்ஷ…
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு நிலக்கரி கையிருப்பு தற்சமயம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ( CEB) தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை இயக்கு வதற்கு நிலக்கரி இருப்பு போதுமானது என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை அடிப்படையிலான போஷாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். புத்தகங்கள், காலணிகள், சீருடைகளின் விலைகள் 200% உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். காலையில் பாடசாலைக் கூட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஒரு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் பட்டினியுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களாக இருந்தனர். தற்போது பொருளா தார நெருக்கடியால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் பெற்றோர் திணறுவதால் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிய வருகிறது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதம தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் ஏற்கனவே ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ளது. பிரதமர் பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமரின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப் படவுள்ளது.
அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். உயிரிழந்தவர் வயலில் விவசாயம் செய்து வந்ததாகவும், அதுவும் எண்ணெய், உரம் இல்லாததால் தோல்வியடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த குடும்பத்தினர் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் முறையான உணவைக் கூட பெற முடியாத அவல நிலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற தந்தை மாலை வரை வீடு திரும்பவில்லை. பின்பு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காணப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் வாழ வழியின்றி ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல்…
நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பில், 011 5234234 மற்றும் 011 5455130 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.