நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு நிலக்கரி கையிருப்பு தற்சமயம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ( CEB) தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை இயக்கு வதற்கு நிலக்கரி இருப்பு போதுமானது என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.