பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
சர்வதேச வறுமை தினத்தை ஒட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான போசனை உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனைக்குடி -05 ஹுசைனியா முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் 52 நாட்கள் அடங்கிய வேலை திட்டதின் ஆரம்ப நிகழ்வினை 2022.10.17 ம் திகதி கல்முனைப் பிரதேச செயலாளர் J.லியாகத் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்கள். விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ARM.சாலீஹ் ,சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் SS. பரீரா, பொதுச் சுகாதார அதிகாரி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவி முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் இதற்கான இதற்கான நிதி பங்களிப்பானது சமுர்த்தித சமுதாய அடிப்படை அமைப்புகள் மற்றும் தனவந்தர்களின்…
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும்…
கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பம் தொடர்பாக கேரள பொலிஸ் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களை பொலிஸார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர். அடித்துக்கொன்ற நபர் மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை பொலிஸார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி…
யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து , பருத்தித்துறை பகுதிக்கு வல்லை வெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணின் 5 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் வல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த வயோதிப பெண்ணின் தாலிக்கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். அதனால் வயோதிப பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்கு…
தீபாவளி பண்டிகையொட்டி தமது கைவரிசைக் காட்ட வருகைத் தந்த ஐந்து பெண்கள் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பொருள் கொள்வனவுக்காக ஹட்டன் நகருக்கு வருகைத் தருபவர்களின் பணம், நகைகள், உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் ஐவரும் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 18- 30 வயதுக்குட்பட்ட குறித்த ஐந்து பெண்களும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் பத்திக் குச்சிகள் விற்பனை செய்யும் போர்வையில் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வொஷிங்டன் சென்றிருந்த இலங்கையின் அதிகாரிகள் குழு, பங்களாதேஷ் அதிகாரிகளை சந்தித்துள்ளது. ஏற்கனவே பங்களாதேஷ், இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பறிமாற்ற வசதிகளுக்காக வழங்கியிருந்தது. எனினும் அதனை உரிய காலத்துக்குள் இலங்கையால் மீளச் செலுத்த முடியாமல் போன நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது தாம் வழங்கிய 200 மில்லியன் டொலர்களை இலங்கை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பிச் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலை சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் குறுக்கே எல்லைகளை இட்டு, அதன் ஊடாக இராணுவத்தினர் வீதிகளை அமைத்துள்ளனர். மேலும் வளமான செம்மண் நிலங்களை தங்களுக்குச் சொந்தமானதாகக் கருதி விவசாயம் செய்து வருகின்றனர் என புகைப்படத்தை வெளியிட்டு சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் சஞ்ஜீவ உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றிரவு நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தொகுதியினர் நேற்றைய தினம் நாவலப்பிட்டி நகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் பல்வேறு கோரிக்கைகளை விடுத்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாது போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் இந்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கடன் உதவியின் கீழ் 1156 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 160 இன்ஜின்கள் பயணிகள் போக்குவரத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின்படி, Amerin இலங்கைக்கு ஒரு வண்டியை இறக்குமதி செய்ய 0.558 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது மற்றும் அவை 2021 இல் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் பத்து வண்டிகள் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மற்றவை அனைத்தும் எந்த ஆய்வும் இன்றி விவரக்குறிப்புகளுக்கு வெளியே எடுக்கப்பட்டதாகவும், அவற்றின் நீளம் மற்றும் உயரம் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கை விவரக்குறிப்புகளில் காட்டப்பட்டுள்ள தரநிலைகளுக்கு ஏற்ப இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. . இந்த தணிக்கை அறிக்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வண்டிகளின் நீளம் மற்றும் அகலம் அதிகரித்து காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மேட்டுப்பாதை போன்ற கூர்மையான வளைவுகள் உள்ள வீதிகளில் இந்த பெட்டிகளுடன் ரயில்களை இயக்குவதால் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட வண்டிகளில்…