சர்வதேச வறுமை தினத்தை ஒட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான போசனை உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனைக்குடி -05 ஹுசைனியா முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் 52 நாட்கள் அடங்கிய வேலை திட்டதின் ஆரம்ப நிகழ்வினை 2022.10.17 ம் திகதி கல்முனைப் பிரதேச செயலாளர் J.லியாகத் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்கள்.
விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ARM.சாலீஹ் ,சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் SS. பரீரா, பொதுச் சுகாதார அதிகாரி, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவி முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் இதற்கான இதற்கான நிதி பங்களிப்பானது சமுர்த்தித சமுதாய அடிப்படை அமைப்புகள் மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.