முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருளின் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்கான இணையதள முகவரியொன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் www.wptaxi.lk என்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் 5 லிட்டர் எரிபொருளை எதிர்வரும் காலங்களில் 10 லிட்டர் வரை அதிகரிப்பதற்கு கடந்த காலத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருக்கின்றார்
Author: admin
கிருலப்பனை, பொல்ஹேன்கொடவில் உள்ள அலன் மதினியாராமய விகாரையை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு, அந்த விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக தேருக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (31) உத்தரவிட்டது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விகாரையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி, அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுத்துவதாக தனிப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிமுதல் 6 மணியான காலப்பகுதில் ஒலிபெருக்கியை ஒலிக்கவிட்டு, விகாரையை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தேரருக்கு எதிராக நிபந்தனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98ஆவது பிரிவின்படி, அப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அறுவரால் குறித்த தனிப்பட்ட முறைப்பாடு…
இலங்கையில் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்விளைவுகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் சித்தாந்தவாதியும் மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவின் கீழ் உள்ள ஒரு வலிமையான பிரிவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணமாகும். பசில் தலைமையிலான அந்த குழுவில் தற்போது 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். அது மேலும் சிதைவடையும் என்றே கூறப்படுகின்றது. பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில் இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது. அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பத்து பேரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்காததும் இதற்கான காரணமாகும்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கமானது, ஒக்டோபரில் 66 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஒக்டோபரில் 66 சதவீதமாக குறைவடைந்துள்ளது என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதன் போது, போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் , பெரும்பாலான குற்றங்கள் போதைப்பொருள் பாவனையால் செய்யப்படுவதாகவும், அதனால் போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிகழ்வில் , மத குருமார்கள், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித குணரட்ன , பாடசாலை அதிபர் , ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
முதியவர் ஒருவர் நடத்திய அசிட் வீச்சு தாக்குதலில் காயமடைந்த 11 வயது சிறுவன், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சிறுவனின் தாத்தாவே இந்த அசிட் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தில் இன்று பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துச் செல்வதற்கான பிள்ளைகளின் தந்தை பாடசாலைக்கு வந்திருந்ததாகவும் இதன்போது, அவரின் தந்தை இவ்வாறு அசிட் வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சந்தேகநபர் அம்பலாங்கொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார். Facebook இல் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், நிஷி ரணதுங்க, Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் மற்றும் பிரபல நீதிபதிகள் குழுவின் ஒப்புதலுடன், Mrs. Universe New Zealand அமைப்பான National Directness Anna Marie Parrant அவர்களால் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டதாகக் கூறினார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, நிஷி ரணதுங்க, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச மேடையான ‘வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் 2023’ இல் மிஸஸ் வுமன் ஆஃப் தி யுனிவர்ஸ் நியூசிலாந்தின் பெயரைப் பெறுவார். ரணதுங்க, தம்மை ஊக்குவித்து, வழிநடத்தி, சந்தர்ப்பம் வழங்கியதற்காகவும், நிகழ்வின் அனைத்து நடுவர்கள் மற்றும் அனுசரணை வழங்குபவர்களுக்கும் மிஸஸ் யுனிவர்ஸ் நியூசிலாந்து அமைப்பான நேஷனல் டைரக்ட்னஸ் அன்னா மேரி பரன்ட் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறினார். “பல ஆண்டுகளாக…
நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி எகிப்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார். நவம்பர் 06ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அங்கு நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு செல்கின்றார். இந்த பயணத்தின்போது எகிப்பு ஜனாதிபதி உள்ளிட்ட அந்நாட்டில் உயர்மட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்புவார்.
ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஹெலோவீன் கொண்டாட்டம் இடம்பெற்ற போது அவ்வழியாக வேலைக்கு சென்ற நிலையில் வீதியில் இருந்த வடிகானொன்றில் சிக்கி பின்னர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலுமொரு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து பணிக்காக வெளியேறிய சுமார் 23,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் தங்கியுள்ளனர். இந்த விபத்தினால் அவர்களில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தாம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, உயிரிழந்த இளைஞனின் உறவினர்களை…