கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஒட்டுமொத்த பணவீக்கமானது, ஒக்டோபரில் 66 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஒக்டோபரில் 66 சதவீதமாக குறைவடைந்துள்ளது என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.