Author: admin

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் Playoff சுற்றில் Colombo Stars மற்றும் Galle Gladiators அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் Colombo Stars அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Colombo Stars அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்போது மழை காரணமாக போட்டியை 18 ஓவர்களாக மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது. எனவே Colombo Stars அணிக்கு 109 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது. அதனடிப்படையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் Colombo Stars அணி வெற்றி பெற்றுள்ளதுடன் Galle Gladiators அணி LPL கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Read More

தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.…

Read More

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக திருத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தினார். கொழும்பில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான தேவையான விவரங்கள் மற்றும் அறிக்கை என்பன ஜனவரி 2 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதற்கிணங்க அமைச்சரவை மற்றும் அமைச்சராகச் செயற்பட்டு அந்தப் பரிந்துரைகளுக்கு அமைவாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அவற்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More

விசாரணை ஒன்றுக்காக இம்மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு தன்னை அழைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் தெரிவித்தார். எதற்காக தன்னை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்பதுத் தொடர்பான தௌிவான விளக்கமில்லாத, சிங்கள மொழியில் இருந்த கடிதமொன்றை தனக்குப் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, தனக்கு சிங்களம் தெரியாதெனவும் இதுபோன்ற கடிதங்களை தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் தனக்கு வழங்குமாறும் கடிதத்தை வழங்கிய பொலிஸாரிடம் தான் கூறியதாகவும் குமணன் தெரிவித்தார்.

Read More

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (21) தெரிவித்தது. ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 33.9 சதவீதமாகவும் உணவு அல்லாத பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் பணவீக்கம் 31.0 சதவீதமாகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில், டிசம்பர் 24, 25, 31 ஆம் திகதிகள் மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் காரணமாக புகையிரத போக்குவரத்து இரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால், நீகாட்டா பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வீதிகள் மற்றும் நடைபாதைகள் பனிபடர்ந்து வழுக்கும் நிலையில் இருந்ததால், பயணிகள் சவாலான சூழலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாக ஜப்பானின் சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக வடக்கு மாகாணம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் இறைச்சி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கடந்த மாதம் ஏற்பட்ட குளிருடனான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் சுமார் 1600 கால்நடைகள் உயிரிழந்தன.

Read More

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரலோகம, கெட்டதிவுல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனை ஏமாற்றி கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சந்தேகநபரான 45 வயதுடைய மின் ஊழியரை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இலக்கம் 16, கெட்டதிவுல, கிரகலோகம என்ற முகவரியில் வசிக்கும் பி.கே. தெனேத் கௌரவ் பிரேமசுந்தர என்ற சிறுவனே இவ்வாறு சந்தேகநபரால் கடத்தப்பட்டுள்ளார். மின் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வரும் மின் பழுதுபார்க்கும் ஊழியருடன் சிறுவன் நட்பாக இருந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் சிறுவனை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளன். கடந்த 19ஆம் திகதி இரவு 8.30 மணிக்குப் பின்னர் சிறுவன் வீட்டில் இல்லையெனவும் தேடிப்பார்த்த போதும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் சிறுவன் இருப்பதாக தகவல்…

Read More

கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒராண்டு காலப்பகுதியில் இந்த பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கனடாவில் கட்டம் கட்டமாக இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதன் மூலம் மீள் சுழற்சி செய்ய முடியாத 1.3 மில்லியன் தொன் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க முடியும் என சுற்றாடல் ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

Read More