எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரலோகம, கெட்டதிவுல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனை ஏமாற்றி கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, சந்தேகநபரான 45 வயதுடைய மின் ஊழியரை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலக்கம் 16, கெட்டதிவுல, கிரகலோகம என்ற முகவரியில் வசிக்கும் பி.கே. தெனேத் கௌரவ் பிரேமசுந்தர என்ற சிறுவனே இவ்வாறு சந்தேகநபரால் கடத்தப்பட்டுள்ளார்.
மின் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வரும் மின் பழுதுபார்க்கும் ஊழியருடன் சிறுவன் நட்பாக இருந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் சிறுவனை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளன்.
கடந்த 19ஆம் திகதி இரவு 8.30 மணிக்குப் பின்னர் சிறுவன் வீட்டில் இல்லையெனவும் தேடிப்பார்த்த போதும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவனை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் சிறுவன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட சிறுவனுடன் நாவுல பிரதேசத்தில் உள்ள தனது சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற குறித்த ஊழியர் நேற்று 20ஆம் திகதி அதிகாலை சிறுவனுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறியதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.