நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், டிசம்பர் 24, 25, 31 ஆம் திகதிகள் மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.