எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக. 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன. அத்தியாவசிய மருந்துகளின் கட்டுப்பாட்டின் விளைவாக, முறையான சிகிச்சை இன்றி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் கொரிய நாட்டில் இருந்து இந்த மருந்துவப் பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக வடிவேல் சுரேஸ் எம்.பி தெரிவித்துள்ளார். குறித்த மருந்துப்பொருட்களை பெருந்தோட்ட மலையக பகுதிகளுக்கும் நாட்டில் மருத்துவ தேவைப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்க எண்ணியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல்…
Author: admin
ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வியடத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு பாடசாலையினை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி, கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் பதவியை கிராமச் செயலாளராக மாற்றுவதற்கு முன்மொழிவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரிசி இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 7 இலட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது செய்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையின் செலவுகள், கோட்டாவின் மிரிஹான இல்லத்தின் செலவுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் விண்ணப்பித்த விண்ணப்பத்துக்கான தகவல்களை வழங்கினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென தெரிவித்து அந்தத் தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியான ஜனாதிபி செயலகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனதீர மறுத்துவிட்டார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (அ) மற்றும் 5 (1) (ஆ) (i) ஆகிய பிரிகளைக் காரணங்காட்டி RTI விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 (1) (அ) பிரிவின்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியின்றி கோரப்பட்டத் தகவல்களை வழங்க முடியாது எனவும், 5 (1) (ஆ) (i) பிரிவின்படி கோரப்பட்ட தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தகவல் அதிகாரியால் வழங்கப்பட்ட பதிலுக்கு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (22) மாலை 06 மணி முதல் நாளை (23) காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் தல்தியவத்தை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. உஸ்வெட்டகெய்யாவ பாலத்தினூடாக முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் 5,000 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர் வீட்டிற்குள் நுழையும் காட்சியும் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டில், கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக அதிகளவான இலஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு அடுத்த இடத்தில் காவல் துறை இருப்பதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி அமைச்சு, வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 212 பேருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு அடுத்த இடத்தில் அதிகளவான இலஞ்ச குற்றச்சாட்டுகள் காவல்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், 161 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் இருப்பதுடன், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு காணி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 1,945 முறைப்பாடுகள்…
தாய்லாந்தின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடலில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டின் போர்க்கப்பல் ‘எச்டிஎம்எஸ் புயலில் சிக்கியது. அதை தொடர்ந்து கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் உடனடியாக அங்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 75 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 31 மாலுமிகள் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்த நாட்டின் கடற்படை, 30 மாலுமிகள் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 3 போர்க்கப்பல்கள், 2 ஹெலிகொப்டர்கள் மூலம் மாயமான மாலுமிகளை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்தன. இந்த நிலையில் விபத்து நடந்த 41 மணி நேரத்துக்கு பிறகு, அதாவது நேற்று முன்தினம் மதியம் ஒரு மாலுமி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் காயங்கள் இருந்ததாகவும்,…