எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 43 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் போதகர் பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக. 43 கோடி ரூபாய் பெருமதியான மருந்து பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன.
அத்தியாவசிய மருந்துகளின் கட்டுப்பாட்டின் விளைவாக, முறையான சிகிச்சை இன்றி மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் கொரிய நாட்டில் இருந்து இந்த மருந்துவப் பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ சாதனங்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக வடிவேல் சுரேஸ் எம்.பி தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்துப்பொருட்களை பெருந்தோட்ட மலையக பகுதிகளுக்கும் நாட்டில் மருத்துவ தேவைப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்க எண்ணியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.