அரிசி இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 7 இலட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது செய்கை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.