ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இரத்தினபுரி , கேகாலை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை இங்கிரிய மற்றும் காலி நாகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Author: admin
நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது தமக்கு தெரியாது என்றும் ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே இதனை நிறுத்தி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக உருவாக்கப்படும் திணைக்களத்தின் ஊடாக காணி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் சிறந்ததும், பலம்மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பு என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வீரவில-வெல்லவாய வீதியின் வீரவில ஏரியின் முதலாவது பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் நேற்று (04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரவில பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவர் 35 வயதுடைய 5 அடி உயரமும் மெலிந்த உடல் அமைப்பை கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை மற்றும் இறந்தவருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி மேற்சட்டை மற்றும் சாவி, மோதிரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரச வளங்களை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம் எவ்வாறு மின்சார சபையை எட்டாக உடைக்கும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இவ்வாறான விடயங்களை செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு ஆணை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும் இது குறித்து அமைச்சரவையில் பேசப்படவில்லை என்றும் செய்திகளை கொண்டு முடிவுக்கு வர வேண்டாம் என்றும் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல “செய்தித்தாள்களில் வந்ததைப் பற்றி நான் பேசவில்லை. அந்த குழுவில் நானும் இருக்கிறேன்.இதுபற்றி அமைச்சர் காஞ்சன அங்கு கூறினார்” என்கிறார்.
புதிய நேர அட்டவணைக்கு அமைய, இன்று (05) முதல் களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. களனிவெளி ரயில் மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வேக வரம்புகளினால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில், ரயில் மார்க்கங்களில் ஏற்படும் குறைபாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில் அனைத்து ரயில் பாதைகளிலும் புதிய வேகத்தடைகளை விதிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக பிரதான ரயில் பாதை உட்பட அனைத்து வழித்தடங்களிலும் ரயில் தாமதம் ஏற்படுவது வழமையாக மாறியுள்ளது. எவ்வாறாயினும், தற்போது தொடரும் ரயில் தாமதத்தை குறைக்கும் வகையில் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்களுக்கான புதிய நேர அட்டவணையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
களனி-கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளுக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடமொன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீயினால் பெருமளவான பொருட்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது முட்டையின் விலை 50 முதல் 60 ரூபா வரையில் இருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் நிலையில் இந்த விலை உயரும் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள காஸ்பியன் கடற்பகுதியில் சுமார் 2,500 சீல்ஸ் (கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் சுமார் 700 இறந்த சீல்ஸ் பதிவாகியிருந்தன, ஆனால் மேலதிக விசாரணையில் அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது. காஸ்பியன் சீல்ஸ்கள் 2008ஆம் ஆண்டு முதல் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. காஸ்பியன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஜார் காபிசோவ் ஒரு அறிக்கையில், இவை இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று கூறினார். விலங்குகள் கொல்லப்பட்டதாகவோ அல்லது மீன்பிடி வலையில் சிக்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை, என அவர் மேலும் தெரிவித்தார். நிபுணர்கள் சீல்ஸ்களின் மாதிரிகளை சேகரித்துள்ளனர், மேலும் ஆய்வக முடிவுகள் வந்தவுடன் இறப்புக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களாக அதிக வேட்டையாடுதல் மற்றும் தொழில்துறை…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரிகள் விதிக்கப்பாடாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே இவர் கைது செய்யப்பட்டார், தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் தமது ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும் தமது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அமைச்ராக பொறுற்கும் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். புதிய பொருளாதார முறையொன்றை அறிமுகப்படுத்தி ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்