புதிய நேர அட்டவணைக்கு அமைய, இன்று (05) முதல் களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி ரயில் மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வேக வரம்புகளினால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் ரயில்கள் தடம்புரண்டு விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலையில், ரயில் மார்க்கங்களில் ஏற்படும் குறைபாடுகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் வகையில் அனைத்து ரயில் பாதைகளிலும் புதிய வேகத்தடைகளை விதிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக பிரதான ரயில் பாதை உட்பட அனைத்து வழித்தடங்களிலும் ரயில் தாமதம் ஏற்படுவது வழமையாக மாறியுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது தொடரும் ரயில் தாமதத்தை குறைக்கும் வகையில் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்களுக்கான புதிய நேர அட்டவணையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.