வீரவில-வெல்லவாய வீதியின் வீரவில ஏரியின் முதலாவது பாலத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் நேற்று (04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீரவில பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.
உயிரிழந்தவர் 35 வயதுடைய 5 அடி உயரமும் மெலிந்த உடல் அமைப்பை கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை மற்றும் இறந்தவருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி மேற்சட்டை மற்றும் சாவி, மோதிரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.