12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 700 முதல் 800 ரூபாவால் அதிகரிக்கப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200-300 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Author: admin
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் திகதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 கோடி டொலர்களை இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டொலர்களுடன் தற்போது 15ஆவது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 8,370 கோடி டொலர்கள் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது.
———————– (எம்.என்.எம்.அப்ராஸ்) தேர்தல் காலம் அரிசி,பணம் கொடுக்கும் வகையில் அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில்,புதன்கிழமை (01)தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும்,கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாறறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; பிள்ளைகளுக்கு நல்ல கல்வி இருக்கின்றதா? வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய போதியளவு உரம் இல்லை,விவசாயம் செய்ய வளம் இருந்தும் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கின்றார்கள்.இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்தது?என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் தேர்தல் காலம் வாக்குகளை பெறுவதற்காக சிங்கள தலைவர்கள் சிங்களவர்கள் பகுதிகளுக்கு சென்று இனவாதத்தை விதைத்து வாக்குகளை பெறுகின்றனர் அதே போல் முஸ்லிம்…
மத்திய வரவுசெலவு திட்டத்தில் சுங்கவரி குறைக்கப்பட்டதால், கையடக்க தொலைப்பேசிகள், கையடக்க தொலைப்பேசிகளுக்கான கெமரா லென்சுகள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல, பெட்ரோலியப் பொருட்களுக்கான ரசாயனம், அசிட்டிக் அமிலம், ரப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தில் ஆல்கஹால் உள்ளிட்டவற்றின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், காப்பர், சமையலறை மின் சிம்னிகள், சிகரெட்டுகள், ஆடைகள், சைக்கிள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சுங்க வரி குறைப்பு அல்லது அதிகரிப்புக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். வினாத்தாளுக்கு விடை எழுதும்போது, மேலதிகமாக விடைத்தாள் கேட்டபோது, அவர் அதற்கு ” இவள் எதற்கு இவ்வளவு பேப்பர் கேற்கிற .. என்ன எழுதப் போறதோ தெரியா என்ற மேற்பார்வையாளர் பதிலால் தான் அதிர்ச்சியடைந்ததாக மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தர்க்கவியல் வினாத்தாளுக்கு விடைகளை எழுதும்போது, பரீட்சை நிலைய மேற்பார்வை செயற்பட்ட விதத்தின் காரணமாக தான் பாடத்தை மறந்துவிட்டதாக இந்த மாணவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அமைச்சரவை முடிவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவுகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்து குறைந்தபட்சம் 6 வீதம் குறைக்குமாறு திறைசேரியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச – செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளில் 6 சதவீதத்தை குறைக்க கடந்த ஜனவரி 16 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரியில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 102,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ஜனவரி 2022 இல் பதிவாகிய 82,327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 20,218 சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக வருகை தந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து 25,254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13,759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,483 பேரும் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.