மத்திய வரவுசெலவு திட்டத்தில் சுங்கவரி குறைக்கப்பட்டதால், கையடக்க தொலைப்பேசிகள், கையடக்க தொலைப்பேசிகளுக்கான கெமரா லென்சுகள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல, பெட்ரோலியப் பொருட்களுக்கான ரசாயனம், அசிட்டிக் அமிலம், ரப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தில் ஆல்கஹால் உள்ளிட்டவற்றின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம், வைரம், பிளாட்டினம், காப்பர், சமையலறை மின் சிம்னிகள், சிகரெட்டுகள், ஆடைகள், சைக்கிள்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சுங்க வரி குறைப்பு அல்லது அதிகரிப்புக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.