அமைச்சரவை முடிவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டுக்கான செலவுகளுக்கான ஒதுக்கீட்டிலிருந்து குறைந்தபட்சம் 6 வீதம் குறைக்குமாறு திறைசேரியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச – செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளில் 6 சதவீதத்தை குறைக்க கடந்த ஜனவரி 16 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.