கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் காட்டு யானை தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மனித செயற்பாடுகள் மற்றும் தொடருந்து விபத்துகள் என்பன காரணமாக இந்த அளவான யானைகளின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் காட்டு யானை தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 439 யானைகள் உயிரிழந்ததுடன் காட்டு யானை தாக்குதல் காரணமாக 140 மனிதர்கள் கொல்லப்பட்டனர்.
Author: admin
மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு, பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளின்படி உரிமம் பெறப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் விற்பனை செய்யும் போது அதற்கான உரிம இலக்கத்தை லேபளில் பதிவு செய்ய வேண்டும் என அதன் தலைவர் சாந்த நிரியெல்ல விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விடுத்து பொருட்களை சேமித்து வைக்கவோ, பொதியிடவோ, விற்பனை செய்யவோ கூடாது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள துபன் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த வலுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலத்தில் இருந்து 594 கி.மீ ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவுக்கோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கோ சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தலையிடப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை செலுத்த வேண்டிய 17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியுடன், மொத்தமாக 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியை இலங்கையின் கடன் நிவாரண செயற்பாடு நிரப்பும் என எதிர்பார்ப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை மற்றும் அதன் கடன் வழங்குநர்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளுக்கமைய, கடன் நிவாரண நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு இடம்பெறும் விதம் மாறுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த விடயங்களில் சர்வதேச நாணய நிதியம் தலையிடப் போவதில்லை என நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலமாகியும் பயண ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், பணம் வாங்குவதில் மாத்திரமே குறித்த பெண் கவனம் செலுத்துவதால், சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர் அது தொடர்பில் பெண்ணுடன் கடுமையாக பேசிய போது அப்பெண் தொடர்பை துண்டித்துள்ளார். அதை அடுத்து அப்பெண் தனது விலாசமாக கூறிய அச்சுவேலி பகுதிக்கு சென்று அப்பெண்ணை விசாரித்த போதே, அப்படியொருவர் அங்கு இல்லை எனவும் , தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் விடயமும் பணம் கொடுத்தவருக்கு தெரியவந்துள்ளது. அதனை…
யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது நவாலி மானிப்பாயை சேர்ந்த செல்வ மகேந்திரன் கமலரூபன் (வயது-36) என்பவர் படுகாயமடைந்துள்ளார். யாழில் இருந்து மன்னார் நோக்கி நேற்று இரவு 9.30 மணியளவில் பயணித்த சமயம் முழங்காவில் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனைக்காக வழி மறித்தும் நிறுத்தாமல் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் மன்னார் முருங்கன் வரை பயணித்துள்ளார். பின் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரிஹான-பெத்தகான பிரதேசத்தில் இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நுகேகொட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பண கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட வேண்டிய பொலிஸ் சார்ஜன்ட் தலைமறைவாகி உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் முதலில் ஒருவரை கைது செய்து விசாரிக்கும் போது கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் போலீஸ் சார்ஜன்ட் யார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியானதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன. இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடைசி முட்டை இருப்புக்கான அனுமதியை நேற்று வழங்கியது. பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த முட்டைகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை நேரப்படி காலை 6.55 ஆகும் போது உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 2045 டொலராக நிலவுகிறது. இது நேற்றைய நாளைக் காட்டிலும் 25 டொலர்கள் அதிகரிப்பாகும். பலவீனமான அமெரிக்க பொருளாதார அளவீடுகளால் வட்டி விகித உயர்வை இடைநிறுத்துவதற்கான சவால்கள் அதிகரித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளுக்கான பாதுகாப்பான வழிமுறைகளை தேட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாகவே தங்கத்தின் விலையில் இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய விலை அதிகரிப்பானது, மார்ச் மாதம் 2022க்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த மட்டமாகும். கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 96 டொலர்களால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது, இலங்கையிலும் கணிசமாக விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள் பங்குபற்றிய வேளையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்ஸ் நிதியமைச்சர் புருனோ லு மைரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இதற்கிடையில், கடனை நிலைநிறுத்துவதற்கான தீர்வை விரைவாக செயல்படுத்த இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.