உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை நேரப்படி காலை 6.55 ஆகும் போது உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 2045 டொலராக நிலவுகிறது.
இது நேற்றைய நாளைக் காட்டிலும் 25 டொலர்கள் அதிகரிப்பாகும்.
பலவீனமான அமெரிக்க பொருளாதார அளவீடுகளால் வட்டி விகித உயர்வை இடைநிறுத்துவதற்கான சவால்கள் அதிகரித்துள்ளன.
இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளுக்கான பாதுகாப்பான வழிமுறைகளை தேட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாகவே தங்கத்தின் விலையில் இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய விலை அதிகரிப்பானது, மார்ச் மாதம் 2022க்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த மட்டமாகும்.
கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை 96 டொலர்களால் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது, இலங்கையிலும் கணிசமாக விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.