இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள துபன் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த வலுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலத்தில் இருந்து 594 கி.மீ ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவுக்கோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கோ சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.