24CT : Rs 177,000 22CT : Rs 162,300 21CT : Rs 154,900 18CT : Rs 132,800
Author: admin
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் உற்பத்தியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் நேற்றைய தினம் நிதி இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பினைத் தொடர்ந்து விலைகளை குறைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நலனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளின் விலைகள் 500 முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்பட…
7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து சிரேஷ்ட குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.பி மெதவத்த சிரேஷ்ட பிரதி உதவி சேவைகள் மற்றும் வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.கே.ஜெயலத் கிழக்கு…
இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிட்டார். நுவரெலிய சீதையம்மன் ஆலயம் தொடர்பான சிறப்பு தலைப்பை இலங்கையின் பிரதமர் வெளியிட்டு வைத்து ஒருநாள் கழிந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் கருத்து வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார சூழ்நிலை தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்துள்ளார்.
நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவையான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அந்த பதினான்கு வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய கடன் திட்டத்தில் தொண்ணூற்று ஒன்பது சதவீத மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து பெறப்பட உள்ளன. எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்குறையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது. இதேவேளை இந்தோனேசிய கடன் திட்டம் மூலமும் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்…
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளனர்
இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பணிப்புரையின் பேரில், விசாரணை கோட்டை பொலிஸாரிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கியின் நிதியியல் திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா, கடந்த 11ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார். நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள நிலத்தடியின் மூன்றாவது மாடியில் உள்ள பெட்டகத்தில் இருந்து இந்த பண மூடை காணாமல் போனதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோட்டை பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழுவொன்று உடனடியாக முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெட்டகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள 23 அதிகாரிகளை விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு…
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ…
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய, குறியீட்டில் முதல் இடம் லெபனான் காணப்படுவதோடு, அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும். இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன. அந்த நாடுகளில் பணவீக்கம் முறையே 128 மற்றும் 107 சதவீதம் ஆகும்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடையும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.