க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடையும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.