நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பிரதி பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார். அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மேலதிக செலவை சபை ஏற்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். “மின் கட்டண உயர்வால், 10 வருடங்களுக்கு பின்னர், கடந்தாண்டு செப்டெம்பரில் நீர் கட்டணமும் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2023 ஜனவரியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது, ஆனால் அந்த உயர்வு இன்னும் நீர் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை,” என்றார். “இருப்பினும், புதிய மின் கட்டணத்தை நிர்வகிக்கும் போது நீர் சபை மேலதிக செலவுகளை ஏற்க வேண்டியிருந்தது. ஆனால் எங்களால் இதை நீண்ட காலத்திற்கு செய்ய முடியாது,” என்றும் அவர் குறிப்பிட்டார். மின் கட்டண உயர்வால் நீர் சபைக்கு மேலதிகமாக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகிறது. நிலவும் வெப்பமான காலநிலையால் நீரின் தேவையும் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான அறிவிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அந்த திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் – புத்தளம் பிரதான வீதியில் லொறி ஒன்றுடன் பஸ் மோதியதில் சாரதி பலியாகினார். புத்தளத்திலிருந்து கல்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த லொறி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து கல்பிட்டியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லொறியின் சாரதி பலியானதுடன், பேருந்தில் சென்ற பயணிகள் காயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதியும் படுகாயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் லொறியில் பயணித்த மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைக்காக குருநாகல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கு மே 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அனுராதபுரத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். எப்பாவல, மெடியாவ, யாய 2 பகுதியில் அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் 81 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். வெப்ப அதிர்ச்சியினால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் மூன்று இறப்புகள் வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தற்போதைய வெப்பநிலைக்கு முகங்கொடுக்கும் வகையில் வெப்ப ஆற்றலைக் குறைக்கும் வகையில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான பணிகளில் ஈடுபடுவது உடலுக்கு உகந்தது அல்ல எனவும் மே மாதம் 20ஆம் திகதிக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின் பின்னர் இந்தச் சட்டமூலம் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக அரசாங்கம் வேறு தகுதியானவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக கல்வியாளர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க ஒப்பந்தம் எடுக்கும் குழுவே அன்றி நாட்டைப்பற்றிய உணர்வுகளைக் கொண்ட குழு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை என்பதும், இயக்கப்படும் அனைத்து விமானங்களும் பல்வேறு நாடுகளில் இருந்து குத்தகை முறையின் கீழ் பெறப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டுவந்த குறித்த தகவல் அமைச்சர் வாயிலாக வெளிவந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொறியியல் துறைக்கு நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்து விமானங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமைத்துவம், பொறியியல் திணைக்களம்,…
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) 2023ம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு (25) செவ்வாய் கிழமை பாடசாலை வளாகத்தில் அதிபர் எம.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்றது. கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் என்.வர்னியா (திட்டமிடல் பிரிவு) பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். விஷேட அதிதியாக பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப். பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.இஸ்ட்.அஜவத் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்தார். தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். பெரும்பாலானோர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால், அந்த நேரத்தில் சுனாமி அபாயம் குறித்து தகவல் கிடைத்தால், அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் ஒலிக்கும் முறைமை தயார் செய்யப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…