(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2023ம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு (25) செவ்வாய் கிழமை பாடசாலை வளாகத்தில் அதிபர் எம.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் என்.வர்னியா (திட்டமிடல் பிரிவு) பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விஷேட அதிதியாக பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப். பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.இஸ்ட்.அஜவத் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.