மன்னார் – புத்தளம் பிரதான வீதியில் லொறி ஒன்றுடன் பஸ் மோதியதில் சாரதி பலியாகினார்.
புத்தளத்திலிருந்து கல்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த லொறி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து கல்பிட்டியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த அரச பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லொறியின் சாரதி பலியானதுடன், பேருந்தில் சென்ற பயணிகள் காயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதியும் படுகாயங்களுடன் கல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் லொறியில் பயணித்த மற்றுமொரு நபர் தீவிர சிகிச்சைக்காக குருநாகல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.