க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பெண் வழங்குவதில் உருவாகியுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 600,000 மாணவர்களால் க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர் தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறும் அறிவுறுத்தினார். இந்த நடவடிக்கையானது, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் டிசம்பரில் நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என்றும், மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Author: admin
கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த வாரம் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதுடன், பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு அது நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பஸ்களுக்கு 40 லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும், மண் அகழ்வு வாகனங்களுக்கு 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறே பாரவூர்திகளுக்கு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றர் வரையும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரிலிருந்து…
மேல் மாகாணத்தில் நாளை(26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். இவ்வருடம் இதுவரையில் இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது DEN 2 மற்றும் DEN 3 வைரஸ்கள் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்படி, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தை தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்டமியற்றும் நபர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை மொத்தம் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகிய நேற்றைய நிலநடுக்கம், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் பதிவாகிய மிகப் பெரிய நிலநடுக்கம் எனவும் புவி இயற்பியலாளர் நில்மினி தல்தேன மேலும் தெரிவித்துள்ளார். இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது. இலங்கையில் ஏற்பட்ட இந்த அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிய பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதற்கான காரணங்களை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வெசாக் போயாவை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களின் (தானசாலைகளின் ) எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் . சில சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தன்சல்கள் நடத்துவது குறித்து யாரும்பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் . இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறியதாவது: “இந்த ஆண்டு, வெசாக் தன்சல் பற்றி எங்களுக்கு எந்த பதிவுகளும் இடப்பெறவில்லை. பெரும்பாலான சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இதுவரை தன்சல்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு தன்சல்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்சல் நடத்த விரும்பினால், வழக்கம் போல் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும். அதுபற்றி தகவல் தெரிவித்த பின், அங்கு சென்று, இடங்களை சரிபார்த்து, தேவையான அறிவுரைகளை வழங்குவோம். தன்சல்…
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து மீண்டும் தொழில் தொடங்கும் நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 2 மில்லியன் வரையிலான குறைந்த வட்டியில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அந்த வருடத்தில் 30,915 பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்லும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த மரப்பட்டிகளில் இருந்து 24 போதைப்பொருள் பார்சல்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபாவாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரன் அலஸ் அறிக்கையின் பிரதியொன்றை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் கையளித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஆண்டு உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் அமைச்சர் தெரிவித்தார்.