இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை மொத்தம் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகிய நேற்றைய நிலநடுக்கம், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் பதிவாகிய மிகப் பெரிய நிலநடுக்கம் எனவும் புவி இயற்பியலாளர் நில்மினி தல்தேன மேலும் தெரிவித்துள்ளார். இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட இந்த அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிய பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதற்கான காரணங்களை அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.