ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வெசாக் போயாவை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களின் (தானசாலைகளின் ) எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் .
சில சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தன்சல்கள் நடத்துவது குறித்து யாரும்பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் .
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறியதாவது:
“இந்த ஆண்டு, வெசாக் தன்சல் பற்றி எங்களுக்கு எந்த பதிவுகளும் இடப்பெறவில்லை. பெரும்பாலான சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இதுவரை தன்சல்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு தன்சல்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன்சல் நடத்த விரும்பினால், வழக்கம் போல் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும். அதுபற்றி தகவல் தெரிவித்த பின், அங்கு சென்று, இடங்களை சரிபார்த்து, தேவையான அறிவுரைகளை வழங்குவோம். தன்சல் நடைபெறும் நாட்களில் அந்தந்த இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.