முகத்திடல் மற்றும் அலரி மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த மதிப்பு ரூ. 400 மில்லியனாகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அதேநேரத்தில் தீ வைக்கப்பட்டதில் 50 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன் மேலும் 25 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிகழ்வில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பஸ் சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர் மட்டத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமை பஸ் உரிமையாளர்களை கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை பஸ் உரிமையாளர்கள் ஊக்குவிக்கவில்லை அவர்கள் தங்கள் பேருந்துகளை வாடகைக்கு விட்டு தங்கள் வேலையைச்…
Author: admin
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடிதங்கள் வழங்குவது 20/05/2022 திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (20) கல்வி அமைச்சில் புதிய கல்வி அமைச்சர் பதவியேற்றதன் பின்னர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இது போன்ற பரிந்துரையைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் 2. சுசில் பிரேமஜயந்த – கல்வி 3. கெஹலிய ரம்புக்வெல்ல – ஆரோக்கியம் 4. விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் 5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் நிலம் 6. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் 7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு 8. நலின் பெர்னாண்டோ டிரேஸ், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு 9. திரான் அலஸ் – பொது பாதுகாப்பு முன்னதாக நான்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகமாகவும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகாரமாகவும், பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தியாகவும், காஞ்சனா விஜேசேகர மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இதற்கிடையில், புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களின் சம்பளம்…
பல அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை மனுஷ நாணயக்கார தொழில் அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(ராய்ட்டர்ஸ்); இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மெய்நிகர் பணியானது, நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசிய நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்பப் பேச்சுக்களை மே 24 அன்று முடிவடையும் என்று நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் வியாழக்கிழமை (19) தெரிவித்தார். ரைஸ், மெய்நிகர் IMF மாநாட்டில் பேசுகையில், IMF இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறினார். கடன் சுமையில் உள்ள நாடு 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது, ஏனெனில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை சமூக அமைதியின்மையை தூண்டியுள்ளது. “எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் அங்கு எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கு ஆதரவாக பங்குதாரர்களுடன் நாங்கள் ஈடுபடுவோம்” என்று ரைஸ் கூறினார்.
டாக்டர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. ரூபா. 100 கோடி வரை வசூல் செய்து கடந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. தற்போது இந்த வருடம் டான் திரைப்படம் வெளியாகியுள்ளது. படம் கடந்த மே 13ம் தேதி வெளியானது. டான் படத்தின் வசூல் முதல் நாளில் இருந்தே படத்தின் வசூலுக்கு குறையே இல்லாமல் ஓடியது. நான்கு நாளிலேயே படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது வசூல் வேட்டை நடத்தியது. தற்போது என்ன தகவல் என்றால் படம் ஆறு நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சிபி சக்ரவர்த்தி முதன்முறையாக இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி சிவகார்த்திகேயன் மற்றும் காட்சிகள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. காமெடி, சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைய குடும்பத்துடன் வந்து பலரும் படத்தை கண்டு மகிழ்கின்றனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19) காலை 6.30 மணி அளவில் குடியிருப்புக்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்து பாரிய 50 அடி உயரத்திலுள்ள மதில் ஒன்று சரிந்து விழுந்ததில் 4 குடியிருப்புகள் சேதமாகி உள்ளன. குறித்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய் ஒருவருக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த தாய் தலவாக்கலை தோட்டத்தில் இயங்கும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த மண்திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெருமதி மிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளன. குறித்த மண் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கணத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இதே வீட்டிலிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் எவ்வித ஆபத்துக்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் சட்ட வரைவு ஆலோசகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடி அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் 21ஆவது திருத்தச் சட்டத்தின் சரத்துக்களை இரு எம்.பி.க்களும் மேற்கொள்வார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது 19வது திருத்தத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும், ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது இதில் அடங்காது. எனினும் இது ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும். இது சுதந்திரமான நிறுவனங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில், புதிய திருத்தத்தை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்து, வரும் நாட்களில் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதேவேளை கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பதவி விலக வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள…