தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்துள்ளதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடும் மழை மற்றும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Author: admin
மாதா, பிதா, குரு, தெய்வம். தன்னுயிரை துச்சமென்று நினைத்து மாணவர்களை கரை சேர்க்கும் ஆசான்.
தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா 11 போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தைத் தொடர்ந்து தாய்வானின் கடற்கரையிலிருந்து மைல் தொலைவில் இந்த ஏவுகனைகள் ஏவப்பட்டுள்ளன. சீனாவின் வலுவான நட்பு நாடான வடகொரியா அண்மைய மாதங்களில் மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி பிராந்தியத்தில் பதற்றத்தை தூண்டி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே சீனாவும் அதனை பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கிறது அது இறுதியில் தேவைப்பட்டால் பலவந்தமாகவேணும் அது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவும் தாய்வானை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. எனினும் அந்த தீவுடன் ஒரு வலுவான உறவைப் பேணுகிறது. அத்துடன் தாய்வான் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களையும் அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில் சீனாவின் ஏவுகனை வீச்சை அடுத்து தாய்வானும் தமது பாதுகாப்பு…
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 முந்தைய விகிதத்திலிருந்து ரூ. 34 ஆக குறைக்கப்படும் என்று NTC இன் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்தார். அண்மையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளுக்கு வழங்குவதற்காகவே பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இன்று (04) நள்ளிரவில் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. QR குறியீட்டு முறையின் ஊடாக பேரூந்துகளுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளில் வாரத்திற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே வழங்கப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜந்த பிரியஞ்சித் தெரிவித்தார். ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு நீண்ட தூர பேருந்துகள் 1 மணி…
தேவைக்கு ஏற்ப QR குறியீட்டை ரத்து செய்து புதிய QR குறியீட்டை கோரும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் ஊடாக பெறப்படும் QR குறியீட்டை வேறு எவருக்கும் காட்சிப்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமக்குச் சொந்தமான QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு எந்த நபரும் எரிபொருளைப் பெற முடியாதபடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமையால், போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளை(05) நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மாத்திரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கல்கிசை இலக்கம் இரண்டு நீதவான் நீதிமன்றத்திற்குள் வியாழக்கிழமை (4) பிற்பகல் நபர் ஒருவர் பிரதிவாதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கூட்டத்தினரிடையே இருந்து வந்த ஒருவர், நீதிமன்றக் குற்றாலத்தில் விசாரணைக்காக இருந்த பிரதிவாதியை குறிவைத்துள்ளார். இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கைகலப்பின் போது வெளியேறுவதற்காக கூட்டத்தை பயமுறுத்துவதற்காக மூன்றாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் மொழி பெயர்த்திருந்தார். இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்…
ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர். அதனையடுத்து, சில கட்டிடங்களைச் சோதனையிட்டபோது, இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்தார். . குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, கட்டிடம் உடனடியாக இடிந்து விடுவதற்கான சாத்தியங்கள் இல்லையென உறுதி செய்யப்பட்டதாகவும், கட்டிடம் கட்டுவதற்கு பெறப்பட்ட அனுமதி மற்றும் திட்டம் மற்றும் முறை கோப்புகளை சரிபார்த்து, இறுதி முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்த அப்பகுதியில் உள்ள காமினிபுர நுழைவு வீதியை திறப்பதன் மூலம் இலகு ரக வாகனங்களுக்கு…
உக்ரைன் மீதான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புதினின் ரகசிய காதலியான அலினா மரடோவ்னா கபீவா-க்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது, ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ரஷ்யா டுடேவில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் ஜனாதிபதி புதினுக்கும் மறைமுக உறவு இருப்பதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் அலினாவுக்கு சொத்துகள் இருந்தாலும், இனி பயன்படுத்த முடியாது என்றும் ரஷ்ய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கா தரப்பில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் மகள்களான மரியா புதின், கேத்தரீனா டிக்கோனோவாவை குறி வைத்து பல்வேறு தடைகளை விதித்ததுடன் இருவரும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின்…