இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 முந்தைய விகிதத்திலிருந்து ரூ. 34 ஆக குறைக்கப்படும் என்று NTC இன் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
அண்மையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பயனை பயணிகளுக்கு வழங்குவதற்காகவே பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (04) நள்ளிரவில் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
QR குறியீட்டு முறையின் ஊடாக பேரூந்துகளுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளில் வாரத்திற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே வழங்கப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜந்த பிரியஞ்சித் தெரிவித்தார்.
ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு நீண்ட தூர பேருந்துகள் 1 மணி நேரத்திற்கு மேல் இயங்க முடியாது என்றும், குறுகிய தூர பேருந்துகள் 12 மணி அல்லது 10 மணி நேரம் மட்டுமே இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.