ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், ஏல விற்பனை ஊடாக வழங்கப்பட உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Author: admin
காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட சென்றபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் அக்மிமன பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் தெற்கு அதிவேக வீதிக்கு அருகில் அக்மிமன நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை நிறுத்தியுள்ளனர். பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்களை மீறி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்துவிட்டு அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர். அப்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்த தயாரான போது, மோட்டார் சைக்கிளின் சாரதி பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மீகொட பகுதியை சேர்ந்த 18…
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர், பாடசாலையின் சொத்துக்களுக்கு தாம் ஏற்படுத்திய சேதங்களுக்கு பெற்றோர் நஷ்டஈடு வழங்குவதாக பாடசாலை அதிபர் முன்னிலையில் மாணவர் குழுவொன்று உறுதியளித்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மூலம் பாடசாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாணவர்கள் ஆறு பேர் மற்றும் அவர்களது பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்கப்பட்டதாகவும் ஏற்பட்ட சேதத்தை மீளப் பெற்றுத்தருவதாக பெற்றோர் உறுதியளித்ததாகவும் மனம்பிட்டிய பொலிஸ் நிலையப் பரிசோதகர் அசேல சரத் குமார தெரிவித்தார். மாணவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத்தருமாறு பெற்றோர்களுக்கு மனம்பிட்டி பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அதற்கு இணங்கியுள்ளனர். கடந்த 8ஆம் திகதி சாதாரணத் தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து குறித்த பாடசாலையின் ஆறு மாணவர்களைக் கொண்ட குழுவினர் பாடசாலையின் உபகரணங்கள், மின் விசிறிகள், மலசலகூட கதவுகளை சேதப்படுத்தியமை தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசேட கலந்துரையாடல் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வந்த சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரையில் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடிப்படை பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வை விரைவில் காணுமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த தகவல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் 2020 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நான்கு ரோபோ இயந்திரங்கள் உட்பட ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையத்தை ஆரம்பிப்பதற்காக இந்த மையம் செயல்படாததால் பழுதடைந்து வருகிறது. கடவுச்சொற்கள் (Passwords) சேர்க்கப்பட்டுள்ளதால் சில மென்பொருட்களை இயக்க முடியாது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இம்மையத்தை (இரண்டு வருட காலத்திற்கு) நடத்துவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிக்கு மாதம் ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை இலங்கை சுங்கத்துறைக்கு எட்ட முடியாது என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் கூடிய தேசிய பொருளாதார மற்றும் இயற்பியல் திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இலங்கை சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் 1226 பில்லியன் ரூபா எனவும், கடந்த 4 மாதங்களில் சுங்கத்துறையின் வருமானம் 221 பில்லியன் ரூபா எனவும் சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சட்ட சபையில் பேசிய சுங்கத்துறை அதிகாரி ஒருவர், தற்போதைய இறக்குமதியால் அந்த இலக்கை எட்ட முடியாது. மேலும் கருத்து தெரிவித்த சுங்க அதிகாரி,“தற்போதைய இறக்குமதியை வைத்து செய்யக்கூடிய காரியம் இல்லை. இதுவரையிலான போக்குகளைப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் வருமானம் இவ்வளவுதான் என்று கணித்திருக்கிறோம். அந்தத் தொகையை இந்த ஐந்து மாதங்களில் ரூ. 330…
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர். வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சைக்கு பிநதிய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் இந்த நாட்டில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை வெட்டிய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.